2026 மகுடம் நிகழ்வில் முக்கிய விருதுகளை வென்ற கஹட்டோவிட்ட அல் பத்ரியா
மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “மகுடம் 2026” விருது வழங்கும் மாபெரும் விழா, கடந்த 05.10.2026 அன்று பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேல் மாகாண தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் கல்விச் சாதனை மற்றும் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் நடாத்தப்பட்ட இப் போட்டி விழாவில், அல்-பத்ரியா மகா வித்தியாலயம் நான்கு முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
வெற்றி விபரங்கள்:
சிறந்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்: மேல்மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பிரிவில் இரண்டாம் இடத்தை அல்-பத்ரியா மகா வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. (அதிபர்: திரு. M.A.M.M. அஸ்மிர்)
பிரதி அதிபர்களுக்கான போட்டி: மேல்மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை திருமதி M.B.F. சலீஹா பெற்றுக்கொண்டார்.
தரம் 6 – 9 பாடசாலை ஆசிரியர்களுக்கான போட்டி: மேல்மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை திருமதி M.B.F. நுஸ்ரா பெற்றுக்கொண்டார்.
உயர்தர ஆசிரியர்களுக்கான போட்டி: மேல்மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை திருமதி M.F. பர்ஹானா பெற்றுக்கொண்டார்.
விருதுகளை வென்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்புரிச் சங்கத்தினர் எனப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
(ரிஹ்மி ஹக்கீம்)
