ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மதமொன்றை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் எஞ்சியுள்ள காலப்பகுதியை உடனடியாக அமுல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட பகிரங்க பிடியாணைக்கு அமைய அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
