முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிற்கு விளக்கமறியல்
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை வழக்கு விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக ‘அத தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில், பல தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ரோஹித போகொல்லாகம கைது செய்யப்பட்டிருந்தார்.
