உள்நாடு

இரு முக்கிய மகுடம் விருதுகளை வென்ற கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா

மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட ‘மகுடம்’ விருது வழங்கும் விழா – 2026 நிகழ்வில், கஹட்டோவிட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயம் இரு விருதுகளை வென்றுள்ளது.

நேற்று முன்தினம் (05) பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்தமைக்காகவும், வருடத்தில் சிறந்த முறையில் வளர்ந்து வரும் பாடசாலைக்கான பிரிவிலும் மேற்படி விருதுகள் பாடசாலை அதிபர் திரு சர்ஜூன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *