உலகம்

விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மசகு எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் தீர்மானம்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக மசகு எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மசகு எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் தீர்மானித்துள்ளன.

பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகள் தங்களிடம் உள்ள மசகு எண்ணெய் கையிருப்பிலிருந்து அடுத்த நான்கு மாதங்களில் 100 மில்லியன் கொள்கலன்களை வெளியிடவுள்ளன.

முதல் 20 நாட்களுக்குள் கணிசமான அளவு டீசலை முன்கூட்டியே வெளியிடவும் ஜி7 நாடுகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் விலை அதிகரிப்பால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *