உள்நாடு

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் சிறுவர் தின விழா கொண்டாட்டம்

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கொண்டாட்ட நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றன.

கல்லூரியின் அதிபர் திருமதி என். ஷானியா டேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை நிர்வாகக் குழு, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை நிர்வாக செயற்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவர்களின் கலை மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிக்கொணரும் வகையில் மேடை நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கெடுத்தனர்.

விழாவில் உரையாற்றிய அதிபர் என். ஷானியா டேன், “சிறுவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவது மற்றும் அவர்களின் தனித்துவமான திறமைகளை சரியான முறையில் வழிநடத்துவது பாடசாலையினதும் சமூகத்தினதும் முக்கிய பொறுப்பாகும்” எனக் குறிப்பிட்டதுடன், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை நிர்வாகிகள், SDC மற்றும் SDEC உறுப்பினர்கள், துணை அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(அக்ரம் லுதுபி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *