உள்நாடு

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னிகள் சம்மேளனத்தின் 50ஆவது வருட பூர்த்தி விழாவும் புதிய நிருவாகிகள் சத்திய பிரமாணம்செய்யும் நிகழ்வும்

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னிகள் சம்மேளனத்தின் 50ஆவது வருட பூர்த்தி விழாவும் 2026/2027 ஆண்டிற்காக தெரிவுசெய்யப்பட்ட புதிய நிருவாகிகள் சத்திய பிரமாணம்செய்யும் நிழ்வும் இன்று (27) ஞாயிற்றுக் கிழமை காலை களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எ.எஸ்.எம். பௌஸி ஹாஜியாரின் மக்கொனை, இந்திரிலிகொட இல்லத்தில் நடைபெற்றது.

களுத்துறை மாவட்ட கிளையின் புதிய தலைவர் தாஹிர் பாஸி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இஹாப் கலீல் பிரதம அதிதியாகவும், பிரதித்தூதுவர் ஹிஷாம் அபூ தாஹா அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னிகள் சம்மேளத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸினால் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸினால் சத்தியப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னிகள் சம்மேளனத்தின் முன்னாள் தேசிய தலைவர்களான சட்டத்தரனி இம்தியாஸ் பாகிர் மாக்கார் சட்டத்தரனி என்.எம்.ஸஹீட்,லுக்மான் சஹாப்தீன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மேற்படி சம்மேலனத்தின் மூத்த உறுப்பினர்களான ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்பனிப்பாளர் ஏ.டபிலியூ.எம்.அஜ்வாத்,களுத்துரை காதி நீதிபதி எம்.எல்.அப்துல் அஹ்லா,முன்னால் பேருவலை பிரதேச சபை தலைவர் ஏ.ஆர்.எம்.பதியுதீன் ஆகியோரின் சேவைகலை கொளரவித்து நினைவு சின்னங்கலும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிட த்தக்கது.

இந்த சம்மேளன கிளையின் புதிய தலைவராக பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் தாஹிர் பாஸியும் செயலாளராக ஓய்வுபெற்ற அதிபர் பீ.எம்.எம். ஜாபிரும் பொருளாளராக அர்ஷத் ஸவாஹிரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *