Friday, September 25, 2026
Latest:
உள்நாடு

15 வருடங்களின் பின்பு நிகவரட்டி மிரிஹம்பிடிய முஸ்லிம் வித்தியாலயத்தில் இருவர் சித்தி

அண்மையில் நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் நிகவரட்டி மிரிஹம்பிடிய முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த எம். எஸ்.ஆயிஷா ஐனி 136 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் ஆசிரிய தம்பதிகளான ஆர். எம். சரூப் எம்.ஆர். ரிப்கா
தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியாவார்.

இதேவேளை எம்.எஸ்.எப்.. ருஹைமாவும் 136 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளார். இவர் ஆர்.எம்.சாப்ரான், எம்.ஆர்.எப். ரைஸா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார்.

15 வருடங்களின் பின்பு நிகவரட்டி மிரிஹம்பிடிய முஸ்லிம் வித்தியாலயத்தில் இவ் இருவரும் சித்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.யூ.எம்.சனூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *