Friday, September 25, 2026
Latest:
உள்நாடு

HASSIM OMAR FOUNDATION ஏற்பாட்டில் மாபெரும் சமூகப் பணி!

கடந்த 19/09/2026 அன்று HASSIM OMAR FOUNDATION இனால் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினிகள் (Laptops) வழங்கும் நிகழ்வு மிகச் சிறப்பாகவும் விமர்சையாகவும் பிரபலங்கள் மற்றும் சமூக பிரமுகர்கள் கரங்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை சிரேஷ்ட தயாரிப்பாளர் ஏ.எம்.ரழீம்,அழகுக் கலை நிபுணரும் ஆலோசகருமான ராம்ஸி ரஹ்மான் ,பிரபல தொழிலதிபர்களான ஏ.எம்.ஷரிப்தீன்,எம்.இக்பால்,ரிச் கர்லி அழகுக்கலை நிலைய பணிப்பாளர் பாத்திமா ரிஸ்னா அஸ்லம்,கோலா நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் பசியா யாகூப், தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜௌபர், சுயாதீன தொலைக்காட்சி நிறுவன தமிழ் செய்திப் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் தயாரிப்பாளர் எம்.எச்.எப்.ரின்ஸா,ஊடகத்துறை அமைச்சின் புலனாய்வுத்துறை அதிகாரி ஜிப்ரியா இப்றாஹீம், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம் ஹாஷிம் உமர், இணைப்பாளர்களான ஆகிப் மொஹமட்,இஸ்ரத்,சந்திரிகா நிரோசன்,படப்பிடிப்பாளர் ஹிஷாம் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.


ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எம்.ஐ.எம்.றஹீம்-பூகொடை,
எம்.ஆர்.எப்.றிபானா-வத்தளை,எம். நேசிகா-கொட்டகலை,எம்.எஸ்.எப்.சஹானா-கட்டுபொத்த மற்றும் எம். தேவிகா-மாங்குளம் ஆகியோருக்கு புரவலர் ஹாஷிம் உமருடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகள் மடி கணனிகளை வழங்கி வைத்தனர்.
இந்நிலையில் ஹாஷிம் உமர் பௌண்டேசனின் நலிந்த ஊடகவியலாளர்களுக்கு கரம் கொடுக்கும் திட்டத்தின் கீழ் சிரேஷ்ட கலைஞர் துல்பிகா அன்வர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் தயாரிப்பாளர் மர்ஹூம் எம்.இர்பான் சார்பாக அவரது புதல்வி பாத்திமா சப்ரினா இர்பான் ஆகியோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.


அத்துடன் உடப்புசல்லாவையைச் சேர்ந்த ஆசிரியையும் எழுத்தாளருமான சிவப்பிரகாசம் சசிரேகா எழுதிய மலையின் மகாராணி என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்போது நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டதுடன் உடப்புசல்லாவ கோடன் தமிழ் வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலாசிரியரிடம் அன்பளிப்பாக வழங்கினார்.
இதேவேளை நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகளுக்கு அன்பளிப்புக்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

HASSIM OMAR FOUNDATION CHAIRMAN – HASSIM OMAR & MARYAM HASSIM OMAR அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அஷ்ரப் A சமத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *