உள்நாடு

ஸம்ஹா நிலாப் எழுதிய “அறியாத சுவாரஸ்யங்கள்” நூல் வெளியீடு

பேருவளை மருதானையைச் சேர்ந்த பாத்திமா ஸம்ஹா நிலாப் இனால் எழுதப்பட்ட “அறியாத சுவாரஸ்யங்கள்” கதைத் தொகுப்பு நூல் வெளியீடும், அதன் இலச்சினை அறிமுக விழாவும் நேற்று பேருவளையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இச்சிறப்புமிக்க நிகழ்வில் பிரதம அதிதியாக பேருவளை நகரபிதா அல்ஹாஜ் மாபாஸிம் அஸாஹிர் கலந்துகொண்டார். மேலும், கௌரவ அதிதியாக பாசியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் இர்பான் (நலீமி), சிறப்புப் பேச்சாளராக அல்ஹாஜ் ரிபாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக ஆசிரியர் நப்லான், பேருவளை நியூஸ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஸாபித் துல்பிகார், பேருவளை நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் ஹிஷாம், அஷ்ஷெய்க் உஸாமா (நலீமி), அஷ்ஷெய்க் ஆதில் அமீன் (நலீமி) மற்றும் BR திருமண மண்டப உரிமையாளர் அல்ஹாஜ் ரிஸ்வான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய பேருவளை நகரபிதா, நூலாசிரியருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, எதிர்காலத்திலும் இவர் மேலும் பல நூல்களை வெளியிட வேண்டும் என்றும், இலைமறை காயாக மறைந்திருக்கும் இதுபோன்ற திறமையாளர்கள் தொடர்ந்து முன்னே வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இல்லத்தரசி ஒருவர் இவ்வாறானதொரு நூலை எழுதி வெளியிட்டுள்ளமை பேருவளை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதோடு, நூலாசிரியைக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ஸாபித் துல்பிகார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *