தேசிய மட்டபோட்டிகளுக்குத் தெரிவான கஹட்டோவிட்ட அல் பத்ரியாவின் மூன்று மாணவர்கள்
கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள், 2026ஆம் ஆண்டிற்கான மேல் மாகாண சமூக விஞ்ஞானப் போட்டியில் (Provincial Social Science Competition 2026 – Category 501-1000) கலந்து கொண்டு சிறப்பிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள்:
M. P. LEEN (தரம் 6) – முதலாம் இடம்
M. F. P. ANHA (தரம் 10) – இரண்டாம் இடம்
M. N. M. MINHAJ (தரம் 12/13) – மூன்றாம் இடம்
மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற இம்மாணவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிக்குத் (National Level) தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகமும் ஆசிரியர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
