உள்நாடு

“மானிடம்” குறுந்திரைப்படம் (Short film of “MANIDAM”) பெருவிழா

“மானிடம்” குறுந்திரைப்படம் (Short film of “MANIDAM”) பெருவிழா, எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04:31 மணிக்கு, வெள்ளவத்தை – கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், ‘கேஷ்’ திரைப்பட நிறுவன ஸ்தாபகரும் இயக்குனருமான திருவாய் மொழி கேசவன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில், பிரதம அதிதியாக நீதியரசர் குமாரரத்தினம் பிரபாகரன் (இலங்கை சனநாயக சோசலிச மேன் முறையீட்டு நீதியரசர்), கௌரவ அதிதியாக கந்தையா நடராஜா,
விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா, சிறப்பதிதியாக இரவிகுலன் பிரணவா (அகில இலங்கை சமாதான நீதிவான்) உள்ளிட்ட கலைஞர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *