உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நாளை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை (22) வழங்கப்படவுள்ளது.
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் அரசுத் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், நீண்டகாலமாக இடம்பெற்ற விசாரணைகள் கடந்த மாதம் 24ஆம் திகதி நிறைவடைந்தன.
விரிவான விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நாளை வழங்குவதற்கு மூவரடங்கிய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
