555 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன
பிரபல உலக தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் பீர் சாகிப் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நியாஸ் மெளலவி பெளண்டேசனும் இணைந்து வருமானம் குறைந்த தேவையுடைய மூவினத்தையும் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்குமாக இந்த வருட இலவச வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 555 பேருக்கு விஷேட வைத்தியர்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நியாஸ் மெளலவி புண்டேசனின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தாருல் ஈமான் அக்கடமி பணிப்பாளருமான அல் ஹாபிஸ் மெளலவி லமீர் ஹஸ்ரத் தலைமையில் நியாஸ் மெளலவி பவுண்டேசனின் தொண்டர்களும் மாணவிகளும் இணைந்து கடந்த சனி மற்றும் ஞாயி இரு தினங்களிலும் மூக்குக் கண்ணாடிககளை வழங்கி வைத்தமை குறிப்பிடத் தக்கது.
இதேவேளை கடந்த மாதம் சுமார் 300 பேருக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் மூலம் கண் கெற்ரக் சத்திர சிகிச்சையும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டன.







ஏ.எஸ்.எம்.ஜாவித்
