அனுராதபுரம் விவேகானந்தா தொடர்பில் மு.கா.தலைவர் ஹக்கீமுடன் சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும்,அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் (SDC), பழைய மாணவர் சங்கத்தினர்(OBA) மற்றும் நலன் விரும்பிகளுடனான சிநேகபூர்வமான சந்திப்பொன்று அனுராதபுரம் மாநகர சபை உறுப்பினர் அல் பாரிஸின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை(20) இடம் பெற்றது.
இதன் போது விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் சர்ச்சைக்குரிய காணி தொடர்பிலான மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமா லெப்பை,கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர், உயர்பீட உறுப்பினர் ரபீக் ஆசிரியர், தலைவரின் மாவட்ட இணைப்பாளர் நாச்சியாதீவு பர்வீன், கட்சியின் அனுராதபுரம் மாவட்ட செயலாளர் அன்வர் சதாத், மாவட்டத்தின் இளைஞர் காங்கிரஸ் பிரதி அமைப்பாளர் என்.எம். சாஜித், (நளீமி), கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சீ. சமால்தீன் மற்றும் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட மத்திய குழு உறுப்பினர்களான மீரா சாஹிப், கே.நளர், எஸ்.எம்.சியாத் ஆகியோரும் உடனிருந்தனர்.
முன்னதாக அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலத்தை மு.கா.தலைவர் ஹக்கீம் சென்று பார்வையிட்டார்.







