ரூ.600 மில்லியன் நிதியுதவியுடன் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் அமைப்பின் மன்னார் மாவட்ட பணிப்பாளரும், சமாதான தூதுவரும் தொழிலதிபருமான
ரிசான் ஷேக் அமானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
மன்னார் மாவட்ட மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளில் முக்கியமான ஒன்றாகக் காணப்பட்ட அவசர மற்றும் விபத்து சிகிச்சை வசதிகளை மாவட்டத்திலேயே மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நவீன மருத்துவ வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்துகள் மற்றும் அவசர மருத்துவ நிலைமைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளை வலுப்படுத்தும் என்றும், இதன் மூலம் அவசர சிகிச்சைக்காக மன்னார் மாவட்டத்திற்கு வெளியே செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தலைமைத்துவம் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சு மற்றும் இந்திய அரசாங்கத்துக்கு தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் ரிசான் ஷேக் அமானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் பங்களிக்கும் அனைத்து தரப்பினருக்கும் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு விரைவாகவும் தரமான முறையிலும் நிறைவடைந்து மன்னார் மாவட்ட மக்களின் உயிர்காக்கும் சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் ரிசான் ஷேக் அமானி வாழ்த்தியுள்ளார்.

,
