ஷானி ரவியின் அடிப்படை உரிமைகள் மீறல்.உயர் நீதிமன்றம் உத்தரவு.

தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு,உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் இருவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, குறித்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்த ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன தலா 50,000 ரூபாவையும், குறித்த விசாரணையை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா தலா 10,000 ரூபாவையும் மனுதாரர்களான ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நஷ்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாகத் தங்களை சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரால் குறித்த அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
