நாட்டின் பல பகுதிகளில் மழை செய்யலாம்
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கைக்கு அண்மையிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கின்றது.
இதன்படி, இன்று (7) நண்பகல் 12.08 மணியளவில் காலி, அங்குலுகஹ, இமதுவ, தெலிஜ்ஜவில, யடியன மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
