உள்நாடு

சீனன் கோட்டை அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட மற்றும் கிரிக்கட் அணிகளுக்கு தேவையான ஜேர்சி சீருடை அன்பளிப்பு

பேருவளை சீனன் கோட்டை அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட மற்றும் கிரிக்கட் அணிகளுக்கு தேவையான பல ஆயிரம் ரூபா பெருமதியான ஜேர்சி சீருடைத் தொகுதியை இந்தியாவைச் சேர்ந்த பிரபல இரத்தினக் கல் வர்த்தகரும் புனீத் ஜெம்ஸ் உரிமையாளருமான புனீத் குப்தா (Puneet Gems – Proprietor) Puneeth Gupta அன்பளிப்புச் செய்துள்ளார்.

சீனன் கோட்டை முர்ஷித் ஜெம்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் முகம்மத் முர்ஸி மற்றும் அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலை 2006 க.பொ.த சாதாரண தர குழு மாணவர் ரியாஸத் அலி ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் அவர் ஜேர்சி சீருடைத் தொகுதியை அன்பளிப்புச் செய்ய முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்சி சீருடைத் தொகுதி கையளிக்கும் நிகழ்வு 07.09.2026 திங்கட் கிழமை பி.ப. பாடசாலை எஸ்.எம். ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் அதிபர் ஜே. பர்ஸான் தலைமையில் நடைபெற்றது.

புனீத் ஜெம்ஸ் உரிமையாளருமான புனீத் குப்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜேர்சி சீருடைத் தொகுதியை கையளித்தார். பிரதி அதிபர் எம். முஸம்மில், விளையாட்டு ஆசிரியர்களான எம்.டீ.எம். நைஸர், மற்றும் ஹஸான் அஸ்மத் உட்பட பல பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாடசாலை சார்பில் பிரதி அதிபர் எம். முஸம்மில் புனீத் குப்தா அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றையும் கையளித்தார்.

அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட மற்றும் கிரிக்கட் அணிகளுக்கு தேவையான பல ஆயிரம் ரூபா பெருமதியான ஜேர்சி சீருடைத் தொகுதியை அன்பளிப்புச் செய்த இந்தியாவைச் சேர்ந்த பிரபல இரத்தினக் கல் வர்த்தகரும் புனீத் ஜெம்ஸ் உரிமையாளருமான புனீத் குப்தா அவர்களுக்கும் இதற்கு ஆதரவாக செயற்பட்ட முர்ஷித் ஜெம்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் முகம்மத் முர்ஸி மற்றும் அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலை 2006 க.பொ.த சாதாரண தர குழு மாணவர் ரியாஸத் அலி ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் ஜே. பர்ஸான் நன்றி தெரிவித்தார்.

பேருவளை பீ.எம். முக்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *