அமெரிக்க பொலிஸ் அதிகாரியாக அக்கரைப்பற்று நவீத் முஹம்மத் நியமனம்
அக்கரைப்பற்றைச் சேர்ந்த நவீத் முஹம்மத், அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கும், அக்கரைப்பற்றுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்க்கும் நவீத் முஹம்மதின் இந்தப் புதிய சாதனைப் பயணத்தில் வெற்றி, வலிமை மற்றும் நேர்வழி காட்டலை வழங்கி, மக்கள் சேவையில் சிறந்து விளங்க, இவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இவர், அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி சப்ரி (Deputy Sheriff) – திருமதி அலி சப்ரி தம்பதியினரின் புத்திரர் ஆவார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
