உள்நாடு

முஸ்லிம்கள் இன்று பாதுகாப்பாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளோம்; பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம்.அஸ்லம்

இந்த நாட்டில் சகல இன மக்களும் இணைந்து ஒற்றுமையுடன் வாழ்வதற்கான ஒரு சூழல் மலர்ந்துள்ளது. சில கடந்த ஆண்டுகளில் முஸ்லிம்கள் நி;ம்மதியான வாழ்வதற்கான சூழல் இருக்கவில்லை. அதற்காக நாங்கள் எல்லோரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு அதனை மாற்றியதை;து இன்று எல்லோரும் ஒன்றுபட்டு பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளோம்; என்று குருநாகல் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. எம். அஸ்லம் தெரிவித்தார்.
நபி நாயகம் ஸல் அவர்களது பிறந்த தினத்தை தேசிய தின நிகழ்வாகக் கொண்டாடுகின்ற போது அவர்கள் வாழ்ந்து வழியாட்டிய முறைகளையும்; நாம் எமது வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும். அவர்கள் பிற சமயத்தை மதித்தார்கள். கண்ணியப்படுத்தினார்கள். அக்கம் பக்கத்திலுள்ளவர்களையும் மதித்தார்கள். அதே போன்று நாங்களும் நடக்க வேண்டும்.
தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு குருநாகல் சாஹிறா கல்லூரியில் விசேட மீலாத் விழா வைபவம்; அதிபர் கே. டி. ஹாரூன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. எம். அஸ்லம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளில் ஒருவரான குருநாகல் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய திசாநாயக்க, குருநாகல் மாநகர முதல்வர் ஆனந்த சஹபந்து, குருநாகல் பிரதி முதவல்ர் அஸார்தீன் மொஹினுதீன், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள். எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மீலாத் தினப் போட்டியில் மாணவர் மாணவிகளுடைய கலை கலாசா நிகழ்வுகளுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *