உள்நாடு

நேபாள வெள்ள அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்திற்கு நேரில் சென்று, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

மேலும், நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள செந்தில் தொண்டமான், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேபாள மக்களுடன் தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேபாளம் எதிர்கொண்டுள்ள இந்த கடினமான சூழ்நிலையை விரைவில் கடந்து, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டும் எனவும் அவர் தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, மேல்மாகாண உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் தொழிற்சங்க உப தலைவர் ராஜமணி ஆகியோர் உடனிருந்தனர்.

(இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *