வை.எம்.எம்.ஏ பேரவையின் மீலாத் விழா நிகழ்வு
அகில இலங்கை YMMA இன் மீலாதுன் நபி விழா நேற்று (26) மருதானை டெமடகொடையில் அமைந்துள்ள YMMA இன் தலைமைக் காரியாலயத்தின் AMA அஸீஸ் மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் M.R.M. சியாத் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் விசேட பேச்சாளராக அஷ்ஷெய்க் முப்தி M.Z.M. முஸ்தபா ரஸா கலந்து கொண்டு மீலாத் விசேட உரையை நிகழ்த்தினார்.
இதன் போது நபி (ஸல் ) அவர்களின் ஸ்லோவாக் மாலை, மெளலீது என்பன ஓதப்பட்டு விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
நிகழ்வில் நன்றியுரை யை YMMA இன் தலைவர் வழங்கினார்.
சர்வதேச சமய விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் ஊடக இணைப்பாளருமான பெளஸான் அன்வரின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற மீலாத் நிகழ்வில் YMMA அமைப்பின் பிரதிநிதிகள், உலமாக்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.








(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
