விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இணையும் மள்வானை அல்-முபாரக் மாணவி செல்வி முஸ்னா முபாரக்
உலகலாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து செயலாற்றவுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் பரீட்சார்த்தமான முயற்சியில் ஒரு கட்டமாக குறித்த பயிற்சிப் பட்டறை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
(Mission ShakthiSAT – Phase II (India Programme)
International STEM Leadership, Space Technology & Satellite
Development Programme)
இதில் உலகலாவிய ரீதியில் 108 நாடுகளில் இருந்து 14-18 வயதுக்கு உட்பட்ட சுமார் 200 பெண் மாணவிகள் பங்கு கொள்ளவுள்ளனர்.
இவர்கள் குறித்த நாட்களில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து பயிற்சியில் கலந்து இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
குறித்த மாணவர்கள் இந்திய ஜனாதிபதி , பிரதமர் மற்றும் விசேட பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளனர்.
இதற்காக தெரிவு செய்யப்பட்ட மாணவி முஸ்னா முபாரக் மள்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியில் கடந்த முறை சாதாரண தரப்பரீட்சையில் 9A சித்தியைப் பெற்று தற்போது உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் (MASDA) கற்று வருகின்றார்
குறித்த வாய்ப்பினை இந்த மாணவிக்கு பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் மற்றும் அதற்கான முழுமையான அனுசரணை வழங்கிய சர்வதேச செயற்பாட்டாளர், சமூக சேவையாளர் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி அவர்களுக்கு மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை சார்பாகவும் மள்வானை மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.


