புத்தளத்தில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு போட்டி நிகழ்ச்சிகள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமான மீலாது நபி தினத்தை முன்னிட்டு, அவர்களைக் கௌரவிக்கும் வகையில் புத்தளத்தில் இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள் நேற்று (26) புதன்கிழமை ஆரம்பமாகின.
புத்தளம் சாஹிரா ஆரம்பப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்களில் நடைபெறும்.
இப்போட்டிகளை, பிரதேசத்தின் கல்வி, கலை மற்றும் கலாசாரத் துறைகளில் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், 2008ஆம் ஆண்டு முதல் புத்தளத்தில் இயங்கி வரும் எச். எஸ். இஸ்மாயில் ஞாபகார்த்த மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டிகளில் முன்பள்ளிப் பருவ மாணவர்கள் உட்பட பல மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வு உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அத்துடன் நகர மக்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலரும் பிரபல தொழிலதிபருமான N. அலி இனாஸ் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எச். எஸ். இஸ்மாயில் ஞாபகார்த்த மன்றத்தின் பொருளாளர் ஏ. டப்ளிவ். எம். சகீன், செயலாளரும் கௌரவ புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான எஸ். ஆர். எம். எம். ஆசாத், உதவி செயலாளரும் ஆசிரியருமான எச். எம். மில்ஹான் ஆகியோர் முன்னின்று நிகழ்வை வழிநடத்தி வருகின்றனர்.



(ஏ.என்.எம் முஸ்பிக்)
