உள்நாடு

46 ஆவது “மன்னர் அப்துல் அஸீஸ்” புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் வெற்றி; பரிசாக 49 இலட்சம்

46 ஆவது ‘மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டி” யில் வெற்றியீட்டிய ஹாபிழ்களை கெளரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு; நேற்று புதன்கிழமை 19-08-2026 புனித மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெற்றது.

நேற்று வெளிவந்த இறுதிப் பெறுபேறுகளுக்கமைய போட்டியின் 5 ஆம் பிரிவில் போட்டியிட்ட மாணவன் அல் ஹாபிழ் எம் . ஐ. முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இவருக்கு 55,000 சவூதி ரியல்கள் (சுமார் 4,900,000 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இலங்கை தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்த வெற்றியானது இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றியும் கெளரவமுமாகும்.

இலங்கையில் புனித அல் குர்ஆன் மனனத்திற்கான எழுச்சியினை காட்டி நிற்கும் இவ்வடைவு சவுதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் மற்றும் இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய இணைந்து நடாத்திய தேசிய ரீதியிலான அல் குர்ஆன் மனனப் போட்டிகளின் பிரதிபலிப்பாகவும் இருக்கின்றது எனில் மிகையாகாது.

ஏனெனில் வெற்றிபெற்ற இம்மாணவர் சென்ற ஜனவரியில் இலங்கையில் நடந்த 3 ஆவது தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில் இரண்டாம் பிரிவில் முதலிடத்தினைப் பெற்றவராவார்.

அப்போட்டியினையும் சவூதி அரேபியத் தூதரகத்தின் மேற்பார்வையில் இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆகியன இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *