புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்; ஒரு மாதத்துக்குள் முடிவுகள்
சமீபத்தில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (20) முறைப்படி தொடங்குகின்றன. இப்பணிகள் வரும் ஒகஸ்ட் 20 முதல் ஒகஸ்ட் 25 வரை தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 09ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,723 மையங்களில் இத்தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முடிந்ததும், இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (A/L) விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் தொடங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
