பொருளாதார நெருக்கடி தொடர்பில் திறந்த கலந்துரையாடல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அதன் சவால்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் வகிபாகம் தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று புத்தளம் விழுது காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்புப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் பொருளியலாளருமான திரு. கே. அமிர்தலிங்கம் வளவாளராகக் கலந்துகொண்டு விளக்கங்களை வழங்கினார்.
கலந்துரையாடலின் போது பங்கேற்பாளர்கள் பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.




(ஏ. என்.எம் முஸ்பிக்)
