உள்நாடு

புத்தளத்தில் அனர்த்த முகாமைத்துவம் குறித்த செயலமர்வு

பாடசாலைகளில் அனர்த்தங்களின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்த முயற்சிகள் குறித்த புத்தளம் வலயத்திலுள்ள பாடசாலைகளின் பிரதி அதிபர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கான செயலமர்வு அண்மையில் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் கற்பிட்டியின் கோட்டக்கல்விப் கல்விப் பணிப்பாளர் திரு. ஏ .ஏம். ஜவாத் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் பிரதான வளவாளராக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் விங் கமாண்டர் ஜே.ஏ.ஏ.பீ. ஜெயக்கொடி கலந்து கொண்டதுடன் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு எம்.ஜே.ஏ. நாஸிர் மொழிபெயர்ப்பாளராக கலந்து கொண்டார்.

பாடசாலைகளில் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அமைக்கப்பட வேண்டிய குழுக்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.
குறிப்பாக எல் நினோ காலநிலை காரணமாக ஏற்படப் போகும் கடும் வரட்சியால் ஏற்படவுள்ள பாதிப்புக்களை எதிர்வு கொள்வதற்காக பாடசாலைகளை எவ்வாறு தயார்படுத்துவது என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *