சிமாரா அலியின் இளஞ் சிறகுகள் நூல் வெளியீட்டு விழா
கொழும்பைச் சேர்ந்த ஊதாப்பூ ஏ.ஆர்.எப். .சிமாரா அலி அவர்களின் இரண்டாவது நுாலான இளஞ்சிறகுகள் சிறுவர் கதைகள் நுால் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (15) கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது விழா சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்டீன் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் , கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் மற்றும் பிரதம மந்திரி அலுவலகத்தின் மேலகதிகச் செயலாளர் ஏ.ஆர்.எம் அஷ்ரப், நுாலின் முதற் பிரதியை சுங்க அத்தியட்சகர் உவைஸ் மொஹிதீன் மற்றும் இலக்கியவாதிகள், மகளிர் அமைப்புக்களின் தலைவி. ஆசிரியர்கள், ஊடகவியளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் அகில இலங்கை ரீதியில் சிறுவர்களுக்கிடையே நடாத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற 25 மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களும் சான்றிதழ்களும் பணப் பரிசுகளும் வழங்கி வைத்தனர்.
தலைமையுரையை அஷ்ரப் சிகாப்தீன், நுால் நயவுரையை நாச்சியாதீவு பர்வின், டி.எஸ்.சேனாயக்க கல்லுாாியின் ஆசிரியை சகீக்கா பௌமி நிகழ்த்தினார்கள். ஏற்புரையை நுாலாசிரியர் ஊதாப்பூ சிமரா நிகழ்தினார்.










(அஷ்ரப் ஏ சமத்)
