உள்நாடு

குருநாகல் சாஹிரா கல்லூரிக்கு புதிய அதிபராக கே.டீ.ஹாரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் சாஹிரா கல்லூரிக்கு புதிய அதிபராக கே.டீ.ஹாரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாணக் கல்வி அமைச்சினால் பிரபல பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடங்கள் கோரப்பட்டிருந்தன.

அந்த வகையில் குருநாகல் சாஹிரா கல்லூரிக்கும் அதிபர் வெற்றிடம் கோரப்பட்டிருந்த நிலையிலேயே புதிய அதிபராக கே.டீ.ஹாரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு புத்தளம் கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய இவர் அண்மையில் (12) குருநாகல் சாஹிரா கல்லூரியின் அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

​இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உதவி செயலாளர் இந்திரஜித், அதிபர் தயானந்தா, அதிபர் தினேஷ் மற்றும் உப அதிபர்கள்,
ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *