வைத்தியர் இன்மையால் மூடப்பட்ட வைத்தியசாலை

கம்பிரிகஸ்வெவ முதன்மை வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இரண்டு வாரங்கள் மற்றும் ஒரு மருத்துவ அலுவலகம் உட்பட வசதிகளை கொண்ட இந்த வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதன் காரணமாக கம்பிரிகஸ்வெவ,அழுத்கம, அசறிக்கம, கியுளேகட, வன்னி பழுகொள்ளாவ, இஹலகொட்டியாவ ஹெலம்பகஸ்வெவ உள்ளிட்ட சுமார் 16 கும் மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வைத்தியசாலையில் எந்தவொரு ஊழியரும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரே ஒரு பெண் வைத்தியர் ஒரு மாதத்திற்கு முன்பு வைத்தியசாலையை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் காட்டு யானைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக இரவில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதன் விளைவாக அப்பகுதி மக்கள் சிகிச்சை பெறுவதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சுமார் 28 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஒரு வைத்தியரை பெற்று தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(எம்.ரீ ஆரிப் அநுராதபுரம்)
