குட்டிமலை ஜலாலியா ஸாவியாவில் ஞாயிறன்று ஸுப்ஹான மெளலித் மஜ்லிஸ்

இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன்கோட்டை குட்டிமலை ஜலாலியா தர்கா ஸாவியா மஸ்ஜிதில் வருடாந்தம் நடைபெறும் புனித ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் எதிர்வரும் 16.08.2026 ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகையோடு ஆரம்பமாகும்.
சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ்ஷேக் அல்ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) நிகழ்வுக்கு தலைமை வகிப்பார்.
அஸர் தொழுகையின் பின்னர் புனித சுப்ஹான மௌலித் மஜ்லிஸும், மஹ்ரிப் தொழுகையுடன் வலீபா யாகூத்தியா மற்றும் ஹழரா மஜ்லிஸும் இஷாத் தொழுகையின் பின்னர் முஸாக்கராவும் இடம்பெறும். சீனன் கோட்;டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா பணிப்பாளர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.ஜே.எம். பஸ்லான் (அஷ்ரபி – பீ.ஏ) விஷேட பேச்சாளராக கலந்து கொள்வார்.
பள்ளிவாசல் இமாம்களான ரயீஸுல் முகத்தமுஷ் ஷாதுலி மௌலவி எம்.டப்லியு.எம். பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி), மௌலவி முஹம்மத் இக்ராம் (நுலாரி) ஆகியோர் புனித சுப்ஹான மௌலித் மஜ்லிஸை ஆரம்பித்து வைப்பர்.
கலீபாக்கள், உலமாக்கள், பள்ளிச் சங்க உறுப்பினர்கள், இஹ்வான்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொள்வர்.
(பேருவளை பீ.எம். முக்தார்)
