பிறை தென்பட்டது. றபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பம்
ஹிஜ்ரி 1448 ரபியுனில் அவ்வல் இஸ்லாமிய மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று ஆகஸ்ட் 14 ஆம் திகதி மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பள்ளி வாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நாட்டின் பல பகுதிகளிலும் பிறை தென்பட்டதாக பிறைக் குழுத் தலைவர் இலங்கை வாழ் மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
அதன் படி இன்று (14) மாலையுடன் றபியுனில் அவ்வல் மாதம் ஆரம்பமாகிறது.
மேற்படி பிறை பார்க்கும் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தலைவர் ஹிஸாம் அல் பத்தாஹி உள்ளிட்ட பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் உதவித் தலைவர் மெளலவி புர்ஹானுத்தீன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அஹமட் அப்ரோஸ் உள்ளிட்ட அதிகாரிகள், வளிமண்டல திணைக்கள அதிகாரிகள், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள் மற்றும் மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.



(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
