ஒரு வருட தொடர் முயற்சியின் பயனாக புத்தளம் மாநகர சபையில் புதிய வரலாறு.
புத்தளம் வரலாற்றில் முதன் முறையாக, ஒரே மாதத்தில் ரூபா 7.5 கோடி வருமானம் ஈட்டப்பட்டு, 2026 ஜூலை மாதம் அதிகூடிய வருமானம் பெற்ற மாதமாக பதிவாகியுள்ளதாக மாநகர மேயர் பொறியியலாளர் ரின்ஷாத் அஹ்மத் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடமாக முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நிர்வாக முயற்சிகள், வருமான சேகரிப்பு மேம்பாடுகள் மற்றும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளின் பயனாக இந்த முன்னேற்றம் கிடைத்துள்ளதாக மாநகர முதல்வர் மாதாந்த சபை அமர்வில் அறிவித்தார்.
இந்த அதிகரித்த வருமானத்தின் மூலம் புத்தளம் நகரில் மேலும் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(எம்.யூ.எம்.சனூன்)
