உள்நாடு

ஜும்ஆ உடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள்

ஜும்ஆ உடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர பரீட்சை நடைபெற்று வருவதால் குறித்த பரீட்சை முடியும்வரை முஸ்லிம் மாணவர்களினதும் பரீட்சைகள் நிலையை முஸ்லிம் உத்தியோகத்தர்களின் நலன் கருதி ஜும்மா குத்பா பிரசங்கம் மற்றும் ஜும்ஆ தொழுகைகளை நண்பகல் 12.45 மணியுடன் நிறைவு செய்யுமாறு திணைக்களம் கேட்டுள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் 14, 21, 28 மற்றும் செப்டம்பர் 4ஆம் திகதிகளில் ஜும்ஆத் தொழுகையை சுருக்குவதுடன் பரீட்சை நடைபெறும் நாட்களில் பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் பள்ளிவாசல்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் பரீட்சைகளை எழுதுவதற்கு பள்ளிவாசல்களின் வெளிப்புற ஒலிபெருக்கியின் சத்தத்தின் அளவை குறைத்து அல்லது முற்றாக நிறுத்தி உள்ளக ஒலிபெருக்கிகளை பாவிக்குமாறும் வேண்டுவதுடன் ளுகர் மற்றும் அஸர் தொழுகையின் போதும் சத்தத்தை குறைத்து பாவிக்குமாறு சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், பள்ளிவாசலின் கதீப்மார்கள், முஅத்தின்மார்களையும் திணைக்களம் கேட்டுள்ளது.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *