உள்நாடு

சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் ஏற்பாட்டில் 47 ஆவது வருட மீலாத் சன்மார்க்க அறிவுப் போட்டி

பேருவளை சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 29ம், 30ம் திகதிகளில் அல் ஹூமைஸரா தேசிய பாடசாலையில் நடைபெறும்.

சீனன் கோட்டை குர்ஆன் மதாரிஸின் கீழ் உள்ள 15 குர்ஆன் மத்ரஸாக்களின் மாணவ மாணவிகள் இந்த சன்மார்க்க அறிவுப் போட்டிகளில் பங்குபற்றுவர். அல்குர்ஆன் மனனம், கிராஅத், கஸீதா, இஸ்லாமிய கீதம், ஹழரா பைத், கேள்வி பதில், இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) பற்றிய பேச்சு, தரீக்கா தொடர்பான பேச்சு, அரபு எழுத்தணி போட்டிகள் உட்பட மேலும் பல போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேச்சுப் போட்டி ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் இடம்பெறும்.

செப்டம்பர் 06ம் திகதி பி.ப. 3.00 மணிக்கு பரிசளிப்பு விழாவும் சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅதின் 50 வது வருட பூர்த்தி விழாவும் சீனன் கோட்டை பள்ளிச்சங்கத் தலைவர் அல் ஹாஜ் ஏ.எச்.எம் முக்தார். தலைமையில் நடைபெறும்.

இவ்விழாவில் சீனன் கோட்டை அல் ஹூமைஸரா தேசிய பாடசாலை, நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி, சீனன் கோட்டை ஆரம்பப் பாடசாலை ஊரில் உள்ள சர்வதேச பாடசாலை மற்றும் வெளியூர் பாடசாலைகளில் கல்வி கற்று தேசிய பரீட்சைகளில் சித்தியடைந்த சீனன் கோட்டையைச் சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனன் கோட்டை பள்ளிச்சங்க உறுப்பினர்கள், கலீபாக்கள், மூன்று பாடசாலைகளினதும் அதிபர்கள், வாலிபர் ஹழரா ஜமாஅத் தலைவர் பஸீஹுர் ரஹ்மான் உட்பட உறுப்பினர்கள், உலமாக்கள், பெற்றோர்கள், பிரமுகர்கள், பிரதேச அரசியல்வாதிகள், குர்ஆன் மத்ரஸா அதிபர்கள், என பலரும் விழாவில் பங்குபற்றுவர்.

(பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *