இன்சைட் நிறுவனத்தில் பயிற்சி நெறிகள் முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
இன்சைட் தொழில்நுட்ப முகாமைத்துவ நிறுவனத்தில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகள் வெற்றிகரமாக முடித்த 200 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் எம்..எம் எம். நாஜிம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், பிரதம அதிதியாக துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்டுபி துர்ஹட் (Dr.Semith Luifii Turgut ) இந்நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.எல்.எம். பௌஸ் ஹாஜி, அத்துடன் தொழில் கல்வி அமைச்சின் கீழ் உள்ள தொழில் கல்வி மற்றும் வாழ்க்கை திறன் கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் மன்சூல விதானப்பத்திரன, திட்டமிடல் பணிப்பாளர் ரீ.செந்துாரன், பிரதி உபவேந்தர் மற்றும் பிரதான நிறைவேற்று அலுவலர் ஏ.டப்ளியு.எம். சுஹ்ரி. அக்குறணை, புத்தளம், கொழும்பு மாவனல்லை நிறுவனங்களது அதிபர்கள். மற்றும் விரிவுரையாளர்கள், பெற்றோர்கள் அழைக்கப்பட்ட அதிதிகள் டிப்ளோமா சான்றிதழ் பெறும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இன்சைட் தொழில்நுட்ப நிறுவனங்கள் மாவனல்லை, கொழும்பு, புத்தளம், அக்குறணை போன்ற பிரதேசங்களில் இயங்கி வருகின்றன. இங்கு க.பொ.சா-த. உயர்தரப் பரீட்சை எழுதி பாடசாலை விட்டு விலகிய மாணவர்களுக்கு வீட்டு மின் இணைப்பு , ஆட்டோ மொமைல், வாகனங்கள் திருத்துதல், நீர்க்குழாய் திருத்துதல், கணினி வடிவமைத்தல், போன்ற தொழில்நுட்ப பயிற்சி நெறிகள் ஒரு வருட டிப்ளோமா சான்றிதழ் உள்ளக பயிற்சி அளிக்கப்பட்டு இம் மாணவர்கள் தமது சொந்தக் காலிலேயே தங்கி நின்று தொழில் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தொழில் நுட்பக் கல்வி அமைச்சின் கீழ் உள்ள தொழில் கல்வி ஆணைக்குழுவினால் இவர்களது சான்றிதழ் அரச அங்கீகாரமளிக்கப்பட்டு என்.வி.கியு பரீட்சைக்குத் தோற்றிய சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன.
15 வருடங்களுக்கு முன் பௌஸ் ஹாஜி மற்றும் ஸ்தாபக உறுப்பினர்களால் சிந்தித்து வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மூவின மாணவர்கள், தமிழ் மொழி மூலம் விரிவுரை அளிக்கப்பட்டு தற்பொழுது நாட்டில் 4 தொழில்நுட்பக் நிறுவனங்களாக விளங்குகின்றது. இதன் ஊடாக மேலும் பட்டம், பெறுவதற்கு ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழக மொன்றினை நிறுவுவதற்கு நாங்கள் சிந்தித்து வருகிறோம். அதற்கு நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம். ஆண்டுதோறும் பாடசாலைகளில் 2 லட்சம் மாணவர்கள் உயர்தரம் பரீட்சை எழுதி 45 ஆயிரம் மட்டும் பல்கலைக்கழகம் செல்கின்றன. ஏனைய மாணவர்களுக்கு அவர்கள் நிதி நிலைமை இல்லாமல் வீடுகளில் தங்கியிராமலும் பெற்றோர்களுக்கு பாரமில்லாமல் நாங்கள் இவ்வாறு பயிற்சி நெறிகளுக்கு மாணவர்களைச் சேர்த்து அவர்களுக்கு புலமைப் பரீட்சை அளித்து இவ்வாறு ஒரு நிலைமைக்கு அம் மாணவர்கள் சுயமாகவும் சொந்தக் காலில் நின்று இந்த நாட்டுக்கும் சமுகத்திற்கு சிறந்த தொழில் வல்லுனர்களாக வருவதற்கு கனவு கண்டோம். அவை நிறைவேறிவருகின்றது என ஸ்தாபகத் தலைவர் அங்கு கூறினார்.















(அஷ்ரப் ஏ சமத்)
