உலகம்

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினம்: ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் அடையாளத்தை நினைவுகூர்வோம் – மு. தமிமுன் அன்சாரி

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினம்: ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் அடையாளத்தை நினைவுகூர்வோம் என்று மனிதநேய ஜனநாயக கட்சி
தலைவரும், தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான
மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 13ஆம் திகதி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியும், கியூபாவின் புரட்சிகரத் தலைவருமான பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினமாகும்.

அடக்குமுறை, ஏகாதிபத்திய ஆதிக்கம் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராகத் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த பிடல் காஸ்ட்ரோ, உலகளாவிய ஆதிக்க எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியூபாவின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் சமூக சமத்துவத்தை முன்னிறுத்தி அவர் மேற்கொண்ட அரசியல் பயணம் உலகின் பல்வேறு நாடுகளில் ஆதிக்க எதிர்ப்பு மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பான விவாதங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஏகாதிபத்தியத்திற்கும் அனைத்து வகையான ஆதிக்கங்களுக்கும் எதிராகப் போராடிய அவரது அரசியல் பங்களிப்புகளை நினைவுகூர்வதுடன், சமத்துவம், சமூக நீதி மற்றும் மனிதநேயம் ஆகிய விழுமியங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறோம்.

பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூர்வோம். கியூபா மக்களுக்கு எமது அன்பும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *