உலகம்

கொலம்பியாவை நிலை குலையச்செய்த நிலநடுக்கம்; 132 பேர் உயிரிழப்பு

மேற்கு கொலம்பியாவைத் நேற்று(10) தாக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதுடன் 570-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கொலம்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொலம்பியா நாட்டின் தற்போதைய நிலவர அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கொலம்பியா சமீபத்திய ஆண்டுகளில் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று எனவும் இதையடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கொலம்பியா முழுவதும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் பெருமளவில் உணரப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் காபி விளையும் பகுதியில் அமைந்துள்ள பெரேரா (Pereira) நகரில் உயிரிழப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளன. மேலும், சுற்றியுள்ள நகரங்களும் வாலே டெல் கௌகா (Valle del Cauca) பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *