உள்நாடு

முக்குத்தொடுவா பிரதேசத்தை போதைப்பொருள் அற்ற வலயமாக அறிவிக்க கோரி மாபெரும் ஊர் தழுவிய எதிர்ப்பு ஆர்பாட்டம்

முக்குத்தொடுவா பிரதேசத்தில் ஜூலை மாதம் நடந்து முடிந்த மக்கள் கலந்துரையாடலின் தீர்மானத்தின் பிரகாரம் இளைஞர் எதிர்காலத்தை காப்போம், பாடசாலை மாணவர்களை பாதுகாப்போம், குடும்பங்களைக் காப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (09) முக்குத்தொடுவா பிரதான வீதியில் மாபெரும் ஊர் தழுவிய எதிர்ப்பு ஆர்பாட்டம் இடம்பெற்றது.

முக்குத்தொடுவா பிரதேசத்தை போதைப்பொருள் அற்ற வலயமாக அறிவிக்க கோரியே இந்த பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்பிட்டி பிரதேச சபையின் முக்குத்தொடுவா வட்டார உறுப்பினர் சகோதரர் கெலும் மற்றும் ஊர் பொது அமைப்புகள் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல், பாராளுமன்ற உறுப்பினர் அஜித்கான், கல்பிட்டி பிரதேச சபை உப தலைவர் சமன் குமார, முந்தல் பிரதேச செயலகத்தின் தலைமை கிராம உத்தியோகத்தர், கல்பிட்டி பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரிகள், முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், கல்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டு சபையின் உறுப்பினர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

எம். யூ. எம். சனூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *