ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் நவவி நியமனம்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, இன்று (10) திங்கட்கிழமை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் இவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர், அண்மையில் அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், உயர் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எனப் பல பதவிகளில் இவர் கடமையாற்றியுள்ளார்.
