Thursday, September 24, 2026
உள்நாடு

புத்தளத்தில் “அத்தம” தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு.

“அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து, பிரதான சுத்தப்படுத்தும் பணி சனிக்கிழமை (08) புத்தளத்திலும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், புத்தளம் மாநகர சபை குழுவினர், பிரதேச செயலக அதிகாரிகள், சமூக வலுவூட்டல் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பங்கேற்றனர்.

நகரின் தூய்மையை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம், சமூக ஒற்றுமையையும் பொதுப் பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் சிறந்த முயற்சியாக அமைந்தது.

மேலும், இந்த சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *