உள்நாடு

எஹலியகொட அல் அக்ஷா தேசிய பாட்சாலையில் கனணி தொழில் நுட்ப ஆய்வு கூட நிலையத் திறப்பு விழா.

நவீன கல்வியின்; வளர்ச்சிக்கு கணனி தகவல் தொழில் நுட்ப அறிவும், செயற்கை நுண்ணறிவும் பிரதான காரணியாகளாகும். அதற்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டியது எமது எல்லோருடைய தார்மீகக் கடமையாகும் என்று தஸ்மினா அமைப்பின் இயக்குனர் சாஹ{ல் ஹமீட் தெரிவித்தார்.


எஹலியகொட அல் அக்ஷா தேசிய பாட்சாலையில் யூ. எஸ். ஏ. தஸ்மினா ஐ. என். சி. அமைப்பின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட கனணி தொழில் நுட் ஆய்வு திறப்பு விழா பாடசாலை அதிபர் எல் அஹமட் ஜுமான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தஸ்மினா அமைப்பின் ஸ்தாபகர் சாஹ{ல் ஹமீட் அவர்கள் கலந்து உத்தியோகபூர்வமாக மாணவர் மாணவிகளின் பாவனைக்காக கையளித்தார்.


இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் ஐ. கே. எம். சுபிஹான், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஊர்ப் பிரமுகர்கள் பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதன் போது மாணவிகள் தங்களுடைய கல்வித் தேவையை நிறைவு செய்த தந்தை தஸ்மினா அமைப்பின் சாஹ_ல் ஹமீட் நன்றி தெரிவித்து கருத்துக்களைத் தெரிவித்ததோடு அவருக்கு பாராட்டு நினைசுச்சின்னம் வழங்கி கௌரத்தமை குறிப்பிடத்தக்கது.


இக்பால் அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *