பள்ளஞ்சேனை சிறையிலும் பதற்றம்; கண்ணீர் புகைப் பிரயோகம்
பள்ளஞ்சேனை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் கைதிகள் தற்போது அதிகாரிகள் மீது கற்களை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
