உள்நாடு

இடர்கள் ஏற்பட்டால் அறிவிக்க பரீட்சைத் திணைக்களத்தால் ஐந்து தொலைபேசி இலக்கங்கள்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் இடர்கள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முப்படையினர் மற்றும் பொலிஸாரின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் என நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் ஊடாக அனைத்து தரப்பினரையும் இணைத்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன்னரும், பரீட்சை முடிவுற்ற பின்னரும் இந்தத் திட்டம் செயற்படும். ஏதேனும் இடர் நிலைமை ஏற்பட்டால், பிள்ளைகளைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வினாத்தாள்களைக் கொண்டு செல்லும் போதும் மற்றும் அதிகாரிகளுக்குக் கடமைகளைச் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முந்தைய நாள் 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்படும். அத்துடன் 117 என்ற தொலைபேசி இலக்கமும் செயற்பாட்டில் உள்ளது. தொழில்நுட்ப அறிக்கைகள் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையோ அல்லது 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையோ வழங்கப்படவுள்ளன. முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *