முஸ்லிம் கட்சிப் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் சந்திப்பு
கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, நேற்று (5), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், மக்கள் நலனை மையமாகக் கொண்ட. சமூகம் சார்ந்த நடவடிக்கைகளையும் தொடர்ந்து வலுப்படுத்துவது தொடர்பாகவும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இச்சந்திப்பு, பரஸ்பரம் இந்தியா–இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முன்னெடுப்பின் ஓர் அம்சமாக அமைந்திருந்தது. இதன் போது, இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களும் உடனிருந்தார்.
