இந்திய வெளிவிவகார செயலாளர் – சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பு
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்கள் கொழும்புக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்தார். இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, பிரதானமாக பிராந்திய அபிவிருத்தி மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால விசேட உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இரு நாடுகளின் பரஸ்பர நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான தொடர்புகளும் நெருங்கிய ஒத்துழைப்பும் அவசியமானது என்பதை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம், அபிவிருத்தி ஒத்துழைப்புகள் மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.


