புத்தளத்தில் இடம்பெற உள்ள விவசாய கண்காட்சி

வடமேல் மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தளம் நகர சபையின் விளையாட்டு மைதானத்தில் புதன் மற்றும் வியாழன் (2026/8/05,06) ஆகிய இரு தினங்கள் காலை 9 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெற உள்ளது.
இக் கண்காட்சியில் நவீன விவசாய உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான தெளிவு நவீன விவசாய பயண்பாட்டு உபகரணங்கள் மாடு, கோழி பண்ணை வளர்ப்பு தகவல்கள் மண், உரம், விதைகள் மற்றும் தாவர பாதுகாப்பு தகவல்கள், காய்கறிகள் மற்றும் பூந்தோட்ட தொழில்நுட்ப விளக்கங்கள் விவசாய பயிற்சிகள் ஆலோசனைகள் என்பனவும் வழங்கப்படும் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் இக் கண்காட்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
