கேகாலையில் பஸ் விபத்து.20 பேர் காயம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கேகாலை – கரடுபன பகுதியில் இன்று (3) காலை 6:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
